சென்னை தொழிலாளர் நல ஆணையத்தில் ஒஞ்ச ஒழிப்பு சோதனை: 7 லட்சம் ரூபாய் பறிமுதல்

சென்னை:

சென்னை அணணாசாலை டிஎம்ஸ் அலுவலகத்தில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி நெருங்கு வரும் நிலையில், நிறுவனங்களிடம் இருந்து தீபாவளி மாமுல் பெறப்பட்டு  வருவதாக எழுந்த புகாரின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தில் 15 அதிகாரிகள் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறையில் நேற்று  அதிரடி சோதனை நடத்தினார். அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயிலை அடைத்து சோதனை நடத்தினர். பணிமுடிந்து புறப்பட்ட ஊழியர்கள் சோதனைக்குப் பின்னரே அனுப்பப்பட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுமார் 8 மணி நேரம் நீடித்த இந்த சோதனையின் காரணமாக, 6 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,  இணை ஆணையர் பொன்னுசாமியின் அறையில் இருந்து 15 ஆயிரம் ரூபாயை கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் தகவ்ல வெளியாகி உள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளிக்க தொழிலாளர் இணைஆணையர் பொன்னுசாமிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.