சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு! ரூ.2.53 லட்சம் பறிமுதல்

சேலம்: சேலம் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் ரெய்டு நடத்தினர்.  அப்போது, அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பணம்  ரூ.2.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

நேற்று அமாவாசை என்பதால், சார்பதிவாளர் அலுவலகங்களில் ஏராளமான பத்திரப்பதிவுகள் நடைபெற்றன. இந்த நிலையில்,  சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அமாவாசை தினமான நேற்று அதிகளவு பத்திரப்பதிவு நடைபெற்று உள்ளதாக தெரிகிறது.  இதுகுறித்து தகவல் அறிந்த ஒழிப்புத்துறை காவல்துறையினர், சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென   விடிய விடிய சோதனை நடத்தினர். அப்போது,  கணக்கில் வராத 2 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக சார்பதிவாளர் கனகராஜ் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.