ஓணம் கொண்டாட காதலனுடன் பறந்த நயன்தாரா..

கோலிவுட்டும் மல்லுவுட்டும் எப்போதும் ஒண்ணுக்குள் என்று கூறும் அளவுக்கு ஒட்டி உறவாடி வருகிறது. அந்தக்காலம் முதல் இந்தகாலம் வரை பல மலையாள நடிகைகள் தமிழில் முன்னணி இடத்தை பிடித்திருக்கின்றனர். தற்போது நடிகை நயன்தாரா முன்னணி இடத்தை பிடித் திருக்கிறார். அத்துடன் தனது காதல னையும் தமிழில் தேர்வு செய்திருக்கிறார்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வருகின் றனர். கொரோனா ஊரடங்கில் விக்னேஷ் சிவனுடன் பொழுதை கழித்துக்கொண்டி ருந்தார் நயன்தாரா. ஊரடங்கு முடிவுக்கு வந்ததையடுத்து நயன்தாராவுடன் ஓணம் பண்டிகை கொண்டாட தனி விமானத்தில் விக்னேஷ்சிவனுடன் கேரள பறந்தார். நயன்தாரா குடும்பத்தினருடன் விக்னேஷ் சிவன் ஓணம் கொண்டாடினார்.

இருவ ரும் கேரள பாரம்பரிய உடையில் இருக் கும் படங்கள் இணைய தளத்தில் வெளி யாகி வலம் வருகிறது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கி றார் நயன்தாரா.