வீட்டின் பால்கனியில் கையில் விளக்கு ஏந்தி நிற்கும் நயன்தாரா….!

https://www.instagram.com/p/B-mxVNQhvUk/

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.

இதனிடையே பிரதமர் மோடி ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார் .

பிரதமர் மோடியின் இந்த வேண்டுகோளுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனால், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் யாருமே இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவித்து நயன்தாராவும் தனது வீட்டின் பால்கனியில் கையில் விளக்கு ஏந்தி நின்றார்.

இதனைப் புகைப்படமாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். …