தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.

கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனுடன் இவருக்கு காதல் மலர்ந்தது.

சமூக வலைதளங்களில் மிகவும் கியூட்டாக வலம் வரும் ஜோடிகளில் இவர்களும் ஒருவர். அடிக்கடி இருவரும் சேர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று ஒன்றாக நேரம் செலவிடுவார்கள். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம்.

இந்நிலையில் நயன் விக்கியுடன் இருக்கும் புதிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு தலைவி, சூப்பர், க்யூட் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CKaBwl2BZs3/