சென்னை:

சித்திரை1 நாளை விகாரி தமிழ்புத்தாண்டு நாளை பிறப்பதையொட்டி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்  மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

தமிழ் புத்தாண்டு தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் நாளாகும். இது நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் மேம்பட்ட நிலையின் அடையாளமாக திகழ்கிறது. தமிழ்நாட்டு மக்கள் அன்பு, இரக்கம் மற்றும் வீரம் ஒன்றிணைந்த பண்பின் அடையாளமாக விளங்குகின்றனர். நேர்மையும், ஒழுக்கமும் இவர்களை சமாதானம் மற்றும் நிறைவான வளத்தை நோக்கி வழிநடத்தி செல்கின்றன.

மகிழ்ச்சிகரமான தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வருடம் தமிழ்நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்ததாக திகழ இந்த நாள் உதயமாகட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

தமிழனென்ற பெருமையோடு தலைநிமிர்ந்து நில்லடா!
தரணியெங்கும் இணையிலா உன் சரிதை கொண்டு செல்லடா!

என்ற நாமக்கல் கவிஞரின் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி, ஈடில்லா வரலாற்றை கொண்டுள்ள தமிழ் பெருமக்கள் சித்திரை திருநாளை புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த இனிய புத்தாண்டு உலகெங்கும் வாழும் தமிழர்களின் வாழ்வில் எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும்.

இவ்வாறு  தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.