விஜய் பட பர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்!

விஜய் தற்போது நடித்துவரும  61வது படத்தின் பர்ஸ்ட் லுக்   ரிலீஸ் தேதி திடீரென்று மாற்றப்பட்டு இருக்கிறது.

நாளை மறுநாள் (ஜூன் 22)  அவரது பிறந்தநாள் அன்று  பர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று படக்குழுவினர்கள் தரப்பில்  ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை விஜய் ரசிகர்கள் ஆவலோடு  எதிர்பார்த்து காந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஜூன் 22ம் தேதிக்கு பதிலாக ஒரு நாள் முன்னதாக… அதாவது  ஜூன் 21ம் தேதியே புதுப் படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆக, விஜய் ஃபேன்ஸூக்கு ஒரு நாள் முன்பாகவே கொண்டாடம் காத்திருக்கிறது.

படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியான விநாடி முதல், இணையதளங்களில் வைரலாக்க விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அஜீத் படத்தைவிட அதிகம் ரீச் ஆக வேண்டும் என்று வேண்டுதல் அல்லவா.

இன்னொரு விசயம்… விஜய் படத்துக்கு பெயர் வைக்கப்படவில்லை. விஜய் 61 என்றே அழைக்கப்படுகிறது. நாளை படத்தின் பெயரும் அறிவிக்கப்படுமாம்.