குஜராத் முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு

காந்திநகர்:

குஜராத் முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வராக நிதின் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் சட்டமன்ற தேர்தலில் 99 இடங்களில் பாஜக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து அகட்சியின் முதல்வர், துணை முதல்வர் தேர்வு இன்று நடந்தது.

இதில் முதல்வராக விஜய் ரூபானி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். துணை முதல்வராக நிதின் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.