விஜய் வெட்கப்பட வேண்டும்!: அன்புமணி ஆத்திரம்

பொதுவாக விஜய் படம் வெளியானால் உடன் சர்ச்சைகளும் தொடர்ந்துவரும். அவர் நடித்து வெளிவர இருக்கும் சர்கார் படத்தின் போஸ்டர் இன்று  வெளியான உடனே சர்ச்சையும் ஆரம்பித்துவிட்டது.

“சர்கார் என்ற படத்தின் பெயரை சென்சாரில்அனுமதிக்க மாட்டார்கள் என்பது முதல் சர்ச்சை. அடுத்த சர்ச்சை இன்னும் வில்லங்கமானது.

பட ஸ்டில்லில் சிகரெட் பிடிப்பதுபோல் போஸ் கொடுத்திருக்கிறார். இதை வைத்துத்தான் அடுத்த சர்ச்சை.

விஜய்யின் “அழகிய தமிழ்மகன்” திரைப்படம் கடந்த 2007ம் ஆண்டு வெளியானது. அதில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றது. அந்த நேரத்தில் பா.ம.க.,, “திரைப்படங்களில் புகை மது காட்சிகள் இடம்பெறக் கூடாது” என்று தீவிரமாக போராடி வந்தது. அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணியும், இது குறித்து கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்தார்.

அப்போது நடிகர் விஜய், “அமைச்சர் அன்புமணியின் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். அழகிய தமிழ்மகன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். அதில் ஒரு வேடம் வில்லன். அந்த கேரக்டரை வெளிப்படுத்துவதற்காக புகைப்பிடிப்பதுபோல நடிக்கிறேன். மற்றபடி எனது படங்களில் புகை, மது காட்சிகள் இருக்காது” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் இன்று வெளியாகியிருக்கும் சர்கார் பட போஸ்டரில், விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது.

இது குறித்துத்தான் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.

கொடுத்த வாக்குறுதியை மீறிய விஜய்யை எதிர்த்து பாமக போராட்டங்களை நடத்துமா, அன்புமணி எதிர்பார்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலியில் விஜய் பட போஸ்டருக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

தனது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்
புகைப்பிடிக்கும் காட்சிகளை விளம்பரப்படுத்துவதற்கு
நடிகர் விஜய் வெட்கப்பட வேண்டும்” என்று –அன்புமணி தெரிவித்துள்ளார்.