விஜய் மல்லையா : கம்பெனி பெயர்களில் இந்தியா அதிரடி நீக்கம்

ண்டன்

விஜய் மல்லையா தனது நிறுவனத்தின் பெயர்களில் இருந்த இந்தியா என்னும் சொல்லை நீக்கியுள்ளார்.

விஜய் மல்லையா வாங்கிய கடனை செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடியது தெரிந்ததே.   அவரை இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வர அரசு தரப்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மல்லையாவுக்கு பல தொழில் நிறுவனங்கள் உள்ளன.  அவற்றில் பலவற்றுக்கு ஃபோர்ஸ் இந்தியா என தொடங்கும் பெயர்களை வைத்திருந்தார்.  தற்போது அந்த  ஆறு நிறுவனங்களுக்கும் இந்தியா என்னும் வார்த்தையை நீக்கி புதுப் பெயரிட்டுள்ளார்..

அந்த நிறுவனங்களின் புதுப் பெயர்கள் ஃபோர்ஸ் ஒன் கிரேண்ட் பிரிக்ஸ், ஃபோர்ஸ் ஒன் ரேசிங்,  ஃபோர்ஸ் ஒன் டீம், ஃபோர்ஸ் ஒன் டெக்னாலஜி, ஃபோர்ஸ் ஒன் பிராண்ட் என  மாற்றம் செய்யப்பட்டுள்ளன.  ஃபோர்ஸ் இந்தியா குரூப்பில் இயக்குனராக இருந்த திருவண்ணாமலை வெங்கடேசன் லட்சுமிகாந்தன் மட்டுமே இதுவரை இந்த கம்பெனிகளில் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.   இது தவிர புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஃபோர்ஸ் ஒன் கன்சல்டன்சியில் விஜய் மல்லையா மட்டுமே இயக்குனராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது பற்றி மல்லையா கூறுகையில் ”இந்தியா என பெயரில் சேர்ப்பது குறுகிய மனப்பான்மை கொண்டதாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.   எனவே வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரவே இது போல பெயர் மாற்றத்தை செய்துள்ளேன்.   இது மற்ற பங்குதாரர்களை கலந்து ஆலோசித்த பின்பு எடுத்த முடிவு” என்றார்.