விஜய் படத்தின் புதுப்பட ஃபர்ஸ்ட் லுக் பிறந்தாள் அன்று ரிலீஸ்
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு சுமார் 65 சதவீதத்துக்கும் மேலாக முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு அட்லீ கதை – வசனம் எழுத, ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்திருக்கிறார்.
சத்யராஜ், வடிவேலு, நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா, உட்பட பலர் நடிக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
விஜய் – நித்யாமேனன் காட்சிகள் ஏற்கெனவே சென்னையில் படமாக்கப்பட்டு முடிந்துவிட்டது. விஜய் – காஜல் அகர்வால் தொடர்பான காட்சிகள் தற்போது வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த மாத இறுதியில் படக்குழுவினர் சென்னை திரும்புகிறார்கள்.
அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜுன் முதல் வாரத்தில் சென்னையில் நடக்க இருக்கிறது. இதில் விஜய் – சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் சுமார் 40 நாட்கள் நடக்க இருப்தாக படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
இந்த படத்தில் மேஜிக் நிபுணராக விஜய் நடித்துள்ளதாக தகவல் வெளியானது. ஆனால ஒரு சில காட்சிகளிலேயே விஜய் மேஜிக் நிபுணராக வருகிறார் என்ரர் என செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் பிறந்த நாளான ஜுன் 22-ம் தேதி படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.