விஜய் படத்தின் ஓப்பனிங் பாடல் ஜனவரி 5ம் தேதி படமாக்கப்படுகிறது

பைரவா படத்தைத் தொடர்ந்து விஜய் அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சமந்தா மற்றும் காஜல் அகர்வால் கதாநாயகிளாக நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 5ம் தேதி தொடங்குகிறது.

ஜனவரி 5ம் தேதி இப்படத்தின் பாடலை படமாக்க இருக்கிறார்கள். இதற்காக சென்னை மைலாப்பூரில் பிரம்மாண்டமான செட் ஒன்று போட்டு வருகிறார்கள். மொத்த பாடலும் அந்த செட்டில்தான் படமாக்கப் போகிறார்கள். இப்பாடலில் விஜய்யுடன் வடிவேலும் நடனமாடவுள்ளார்.