Random image

விஜய் படத்தில் ஜோடி காஜலா, தமன்னாவா? ரசிகர்களை குழப்பியடிக்கும் அப்டேட்கள்..

டிகர் விஜய் நடித்த பிகில் படம் வரையில் சில படங்களுக்கு அரசியல் ரீதியாக பிரச்னைகள் வந்திருக்கிறது. பிரச்னைகள் முடிந்ததும் படம் வெளியாகிவிடும். தற்போது விஜய் நடித்து முடித்துள்ள மாஸ்டர் படப்ப்டிப்பின்போது அதிகாரிஅள் ரெய்டு, ஷூட்டிங் ரத்து என்ற பிரச்னைகள் ஏற்பட்டது. தற்போது படம் முடிந்து 5 மாதம் ஆகியும் கொரோனா ஊரடங்கால் தியேடர்கள் மூடியிருக்கும் நிலையில் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் விஜய்யின் 65வது படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளார். காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாகவும் முதல் தகவல் வந்தது. முருகதாஸ் படத்தில் நடிப்பது பற்றி காஜலும் உறுதி செய்திருந்தார். துப்பாக்கி2ம் பாகமாக இப்படம் உருவாக இருப்பதாக அடிக்கடி அப்டேட்கள் வந்த வண்ணமிருந்தன. கடந்த 2 மாதமாக இதுகுறித்து குழப்பமான தகவல்கள் வருகின்றன. இப்படத்தை சன் பிக்சர்ஸிடமிருந்து ராமநாரயணன் பட நிறுவனம் வாங்கி தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. துப்பாக்கி 2ம் பாகமாக இல்லாமல் புதிய ஸ்கிரிப்ப்டை முருதாஸ் உருவாக்கி இருப்பதாகவும் தகவல் வந்தது.. தற்போது ஷாக் தகவலாக விஜய் ஜோடியாக தமன்னா நடிக்கிறார் என தகவல் பரவுகிறது. அப்படியென்றால் காஜல் நடிக்கவில் லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த அப்டேட்கள் ரசிகர்களை குழப்பிக்கொண்டி ருக்கிறது.
விஜய் படம்பற்றி அறிவிக்க உள்ளதாக சில தினங்களுக்கு முன் அறிவித்த முருகதாஸ் அதுபற்றி இன்னும் வாய் திறக்காமல் இருக்கிறார், அடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை இந்த குழப்பங்கள் தொடரும் என்றே தெரிகிறது.