விஜய் நடிகைக்கு அனுஷ்கா வேடம் மீது திடீர் ஆசை..

விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்து கவர்ந்தவர் ரெபா மோனிகா ஜான். அப்படத்தில் முகத்தில் ஆசிட் வீசப்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்து கவர்ந்தார். ரெபாவுக்கு திடீரென்று சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்திருக்கிறது. அதுவும் பாகுபலி படத்தில் அனுஷ்கா ஏற்று நடித்த தேசேனா பாத்திர கனவில் இருக்கிறார்.


தேவசேனா போல் தன்னை பட்டுபுடவை நகைகளால் அலங்கரித்துக்கொண்ட ரெபா ’பாகுபலி 3ம் பாகத்தில் தேவசேனா வேடத்தில் நடிக்க ஆசை’ என டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதற்கு ரசிகர்கள் பலவிதமாக கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். அனுஷ்கா ரசிகர் ஒருவர், ’தேவசேனா பத்திரத்துக்கு அனுஷ்காவை தவிர வேறு யாரும் மாற்று கிடையாது’ என தெரிவித்திருக்கிறார். ஆனால் எல்லா கமெட்ன்டுமே ரெபாவுக்கு எதிராக இல்லை. அவரது அழகை வர்ணித்து சிலரும், தேசேனாவாக நீங்கள் நடித்தால் நான்தான் பாகுபலி’ என்றும் சிலர்  கமென்ட் பகிர்ந்திருக்கின்றனர்.