லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். இது அவர் நடிக்கும் 65 வது படம்.

இந்நிலையில் தற்போது ‘தளபதி 65’ படத்துக்கான ஒப்பந்தத்தில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் கையெழுத்திட்டிருப்பதாகவும், படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது .

மேலும் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 22ல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.