வைரலாகும் கமல் – விஜய் இணைந்து இருக்கும் புகைப்படம்…!

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா லாஃடவுன் காரணமாக ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படம் வெளியாகாமல் முடங்கியுள்ளது .

இந்நிலையில் ஊரடங்கால் அனைவரும் வீட்டில் முடங்கியிருப்பதால் த்ரோ பேக் என பழைய புகைப்படங்கள் வீடியோக்கள் என சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகின்றனர் .

அந்த வகையில் தற்போது கமல்ஹாசனுடன் விஜய் இருக்கும் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர் .

கமல்ஹாசனுடன் இருக்கும் இந்த புகைப்படம் புலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது என தெரிகிறது. அவரது மகள் ஷ்ருதிதான் புலி படத்தின் ஹீரோயின் என்பதால் கமல்ஹாசன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துள்ளார்.