கிரிக்கெட் வீரர் ஆன விஜய் ஆண்டனி..

கொரோனா ஊடங்கில் முடங்கியிருக்கும் சினிமாவுலகம் எப்போது வழக்கமான நிலைக்கு திரும்பும் என்பது தெரியாத நிலையில் நடிகர், நடிகைகள் தங்களை துடிப்புடன் வைத்துக்கொள்ள படாதபாடு பட்டு வருகின்றனர்.


நடிகர் விஜய் ஆண்டனி அவ்வப்போது இணைய தளத்தில் மெசேஜ் பகிர்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்படிருக் கும் தயாரிப்பாளர்களுகு உதவும் வகை யில் குறிப்பிட்ட சதவீதம் சம்பளம் குறைத்துக் கொள்வதாக அறிவித்தார். தற்போது தான் நடிக்கும் தமிழரசன் படம் பற்றிய அப்டேட் ஒன்றையும், படத்தை யும் வெளியிட்டுள்ளார்.
அதில் ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் பாணியில் மாநிலங்களுக்கு இடையான கிரிக்கெட் போட்டிபோன்ற யூனிபார்ம் அணிந்து இரண்டு அணியினர் வருகின் றனர். தமிழ்நாடு டீம்போன்று மஞ்சள் நிற உடையில் விஜய் ஆண்டனி வர அருகில் டெல்லி அணியைப்போல் ப்ளு நிற உடை அணிந்து சோனு சூட் வருகிறார். இப்படத்தை பாபு யோகேஷ்வரன் இயக்குகிறார்.