maxresdefault-2
‘பிச்சைக்காரன்’ படத்திற்கு பிறகு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்து ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் உள்ள படம் ‘சைத்தான்’. தற்போது, கால்ஷீட் டைரியில் ‘எமன், ஹிட்லர்’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளது.
இதில் ‘நான்’ படத்திற்கு பிறகு ஜீவா ஷங்கர் – விஜய் ஆண்டனி காம்போவில் உருவாகிவரும் படம் ‘எமன்’. இதனை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மியா ஜார்ஜ் நடித்து வருகிறார்.
பொலிட்டிக்கல் த்ரில்லரான இப்படத்தில் மிரட்டும் வில்லன் வேடத்தில் பிரபல இயக்குநர் தியாகராஜன் நடித்துள்ளாராம். படத்தில் இடம்பெறும் ‘என்மேல கைவச்சா காலி’ எனும் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், விஜய் ஆண்டனி முதன் முதலாக ‘எமன்’ படத்தில் இரண்டு வித்தியாசமான வேடங்களில் வலம் வரவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.