இருமொழியில் விஜய் ஆண்டனி ’பிச்சைக்காரன் 2’.. பெண் இயக்குனர் இயக்குகிறார்..

விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன். 2016ம் ஆண்டு வெளியாகி இப்படம் வெற்றி பெற்றது. இயக்குனர் சசி டைரக்டு செய்திருந்தார். இப்படத்தின் 2ம் பாகம் உருவாகவிருப்பதாக கூறப்பட்டு வந்தது.


இன்று விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை யொட்டி பிச்சைக்காரன் 2 படத்தின் போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் பிரியா கிருஷ்ணசாமி இயக்குகிறார். இவர் ஏற்கனவே பாரம் என்ற படத்தை இயக்கி இருந்தார். இது தேசிய விருது பெற்றது.
அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன் போன்ற படங்களில் நடிகர் விஜய் ஆண்டனி ஏற்கனவே நடித்து வருகிறார். இசை அமைப்பாளராக அறிமுகமாகி பல்வேறு படங்களுக்கு இசை அமைத்த விஜய் ஆண்டனி, 2012ஆம் ஆண்டு ’நான்’ என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுக மானார். அதன்பிறகு நடிப்பிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.
’நான்’ படத்தில் அறிமுகமான விஜய் ஆண்டனி, சலீம், இந்தியா பாகிஸ்தான் போன்ற பல படங்களில் நடித்தார். இசை அமைப்பதை நிறுத்துவிட்டு முழு நேர நடிகராகிவிட்ட நிலையில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்.