விஜய் ஆண்டனி நடிக்கும் கோடியில் ஒருவன் படத்தின் அறிவிப்பு வெளியாகி சக்கை போடு போட்டது. செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T.D ராஜா தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கி வருகிறார்.

ஆத்மீகா நாயகியாக நடிக்கிறார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்திற்கு உதய குமார் ஒளிப்பதிவு செய்கிறார். லியோ ஜான் பால் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

இந்நிலையில் தமிழ் திரையின் ஹிட் பாடல்களில் ஒன்றான நம்ம ஊரு சிங்காரி பாடலை ரீமிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளார்.

1979-ம் ஆண்டு வெளியான நினைத்தாலே இனிக்கும் படத்தில் இடம் பெற்றுள்ள இப்பாடல் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருந்து வருகிறது.