“மக்களைக் காப்பாற்ற வா தலைவா” அதிரவைக்கும் மதுரை விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள்….!

வரும் 22-ம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த நாள். இதனையொட்டி மதுரையில் விஜய் ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வரவேண்டும் என போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

அஜித் – விஜய் ரசிகர்களில் யார் முன்னிலை என்ற ஹேஷ்டேக் போட்டி சமூகவலைதளங்களில் மீண்டும் நேற்று நடைபெற்றது. இந்திய அளவில் முதலிடத்தில் விஜய் பிறந்த நாள் தொடர்பான ஹேஷ்டேகும், இரண்டாம் இடத்தில் விஜய்க்கு எதிரான ஹேஷ்டேகும் ட்ரெண்டானது.

இந்நிலையில் மக்களைக் காப்பாற்ற வா தலைவா என்றும் , கடவுள் எடுக்கப்போவது 63-வது அவதாரம்.. தொட்டுப் பார்க்க முடியாத 45 வயது மின்சாரம், தளபதிக்கு அரசியலில் இறங்க தயக்கமில்லை.. இறங்கினால் வேறு எந்தக் கட்சிக்குமே இடமில்லை என்றும் பலவிதமான வார்த்தை கோர்வையில் போஸ்டர்கள் தயார் செய்துள்ளனர்.