விஜயை குழப்பிய ’மாஸ்டர்’ பட தயாரிப்பாளர்..

சென்னை

மாஸ்டர் பட இணை தயாரிப்பாளர் குறித்த அறிவிப்பால் விஜய் குழப்பம் அடைந்தார்.

’மாஸ்டர்’ பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அதன் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ,’ இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக லோகேஷ் கடைசி நேரத்தில் இணைந்தார்’’ என்று குறிப்பிட –

விஜய் ரொம்பவே குழம்பிப்போனார்.

தன் பக்கத்தில் அமர்ந்திருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜை ,புருவம் உயர்த்தி உற்று நோக்க, லோகேஷுடம் இருந்து நோ-ரெஸ்பான்ஸ்.

இணை தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்திருப்பதை தன்னிடம் லோகேஷ் சொல்லவில்லையே என்ற வருத்தமும் விஜய் கண்களில் தெரிந்தது.

சேவியர் பிரிட்டோவின் திடீர் அறிவிப்பு, விஜயை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த படக்குழுவையும் திகைப்பில் ஆழ்த்தியது நிஜம்.

தயாரிப்பாளருக்குப் பின் மேடையில் பேசிய லோகேஷ் கனகராஜ் , விஜயின் குழப்பத்துக்கும், படக்குழுவின் திகைப்புக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

‘’ எனக்கும், இந்த பட தயாரிப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. (மேடையின் முன் வரிசையில் அமர்ந்திருந்த லலித்குமாரை சுட்டிக்காட்டி) இந்த லலித்குமார் தான் இணை தயாரிப்பாளர். அவர் பெயரைத்தான்,தவறுதலாக லோகேஷ் என்று தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்’’ என்று விளக்கம் அளித்த பின்னரே , பலருக்குத் தெளிவு பிறந்தது.

 

– ஏழுமலை வெங்கடேசன்