பரத் கம்மா இயக்கியுள்ள விஜய் தேவரகொண்டா நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘டியர் காம்ரேட்’. தெலுங்கு மட்டுமின்றி, தென்னிந்திய மொழிகள் நான்கிலும் வருகிற ஜூலை 26-ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து ஆனந்த் அண்ணாமலை இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

மியூஸிக்கல் த்ரில்லரான இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 19) ஹைதராபாத்தில் தொடங்கியது.

இந்தப் படத்தில் பைக் ரேஸராக நடிக்கும் விஜய் தேவரகொண்டா கத்தாரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பைக் பந்தயத்தில் வெற்றிபெற்ற முதல் இந்திய வீரரான ரஜினி கிருஷ்ணனிடம் முறையாகப் பயிற்சியும் பெற்றுள்ளார்.