அர்ஜுன் ரெட்டி, கீத கோவிந்தம் படங்கள் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டாவுக்கு ஆந்திரா, தெலுங்கானா தவிர்த்து தமிழகத்திலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு .

30 வயதாகும் விஜய் தேவரகொண்டா பல கோடி மதிப்புள்ள சொகுசு பங்களா ஒன்றை வாங்கியதாக தகவல் பரவியது.

பங்களா வாங்கிய விஷயத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் தெரிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா . நான் பெரிய வீடு வாங்கியிருக்கிறேன். பயமாக உள்ளது. எங்களை அம்மா தான் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் வாங்கியுள்ள வீட்டின் மதிப்பு ரூ. 15 கோடி என்று கூறப்படுகிறது.