சமூக வலைதளத்தில் வைரலாகும் விஜய் ரசிகர்களின் போஸ்டர் ….!

பிகில் பட வரிஏய்ப்புக்காக நடிகர் விஜய் வீட்டில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #WeStandwithThalapathyVijay என ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே விஜய் வீட்டில் வருமான வரிசோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் கசிந்தன.

இந்நிலையில் மதுரை சோழவந்தான் பகுதியில் விஜய் ரசிகர்கள் ஒரு போஸ்ட்டரை ஒட்டியுள்ளனர். அதில் “ஒரு ஆணியும் **** முடியாது.. தண்ணீல வளர்ந்த தவளை கூட்டம் அல்ல தளபதியின் அன்பால் வளர்ந்த பாசக்கூட்டம்” என குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமின்றி டெல்லி தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் நீ வா தலைவா… வா என்றும் போஸ்டரில் எழுதப்பட்டுள்ளது

விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-