விஜய்யின் அறுபத்தி நான்காம் படமான மாஸ்டர் படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா ஒப்பந்தமாகியுள்ளார்.

பொங்கல் விருந்தாக மாஸ்டர் படத்தின் செகென்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர் படக்குழு. அந்த போஸ்டரில் விஜய் உஷ் என்று சைகை செய்வது போன்று இருந்தது. அதை பார்த்த விஜய் ரசிகர்களோ மாஸ்டர் போஸ்டர் போஸை வைத்து அவர்கள் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் கூறியிருப்பதாவது, 234 தொகுதியும் சைலண்டா இருக்கணும். 2021ல் நாங்க தான் இருக்கணும். மக்கள் பணி செய்ய வரும்….மாஸ்டர் மாண்புமிகு தளபதி விஜய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.