சென்னை

டிகர் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தை இயக்கிய பாபு சிவன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.

பிரபல நடிகர் விஜய் நடித்த வேட்டைக்காரன் படம் அவரது வெற்றிப் படங்களில் ஒன்றாகும்.

இந்த படத்தின் மூலம் பாபு சிவன் இயக்குநராக அறிமுகம் ஆனார்.

பாபு சிவனுக்கு தற்போது 54 வயதாகிறது.

பாபு சிவன் இயக்குநர் தரணியிடம் உதவி இயக்குநராகப் பணி ஆற்றி உள்ளார்.

விஜய் நடித்த குருவி, பைரவா படங்களுக்கு வசனம் எழுதி இருந்தார்.

வேட்டைக்காரன் படத்துக்குப் பிறகு பாபு சிவன் சன் டிவியில் வரும் ராசாத்தி தொடரை இயக்கி வந்தார்.

ஓரிரு நாட்கள் முன் உடல்நல பாதிப்பு காரணமாக பாபு சிவன் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி நேற்றிரவு திடீர் என பாபு சிவன் மரணம் அடைந்தார்.

திரையுலகில் பாபு சிவன் மரணம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.