சென்னை :

டிகர் பார்த்திபன் சீதா தம்பதியினரின் மூத்த மகள் கீர்த்தணா அக்சய் திருமணம் கடந்த 8ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது.

திரையுலக பிரமுகர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்திய நிலையில், நடிகர் விஜய் அவர்களை சந்தித்து திருமண பரிசு வழங்கி வாழ்த்தினார்.

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சீதா தம்பதியினர் மூத்த மகள் கீர்த்தனா. இவர் ஏற்கனவே கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்துள்ளார். தற்போது உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகன் அக்ஷய்க்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், புதுமண தம்பதியான கீர்த்தனா-அக்சய் தம்பதியினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து, அவர்களுக்கு பூங்கொத்து  கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.