விஜய் ஹசாரே கிரிக்கெட் கோப்பையை வென்று தமிழகம் அபாரம்

டெல்லி:

கடந்த பிப்ரவரி 25ம் தேதி விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இதில் 28 அணிகள் கலந்து கொண்டன. 7 அணிகள் வீதம் 4 குழுவாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

இதன் இறுதி போட்டியில் தமிழகம் மற்றும் மேற்குவங்க மாநில அணிகள் மோதின. இப்போட்டி பெரோசா கோட்லா மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பேட் செய்தது.

இதில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கின் அபார சதம் அடித்தார். மொத்தம் 112 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் தமிழக அணி 217 ரன்கள் எடுத்தது. மற்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை. மேற்கு வங்க அணியின் கனிஷ்க் செந்த் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

தொடர்ந்து பேட்டிங் செய்த மேற்கு வங்க அணியில் சுதிப் சட்டர்ஜி மட்டும் 58 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் குறைந்த ரன்களில் வெளியேறினர். இதன் காரணமாக 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களில் மேற்கு வங்க அணி ஆட்டம இழந்தது. இதன் மூலம் தமிழக அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.