விஜய் ஹசாரே டிராபி: 10 பவுண்டரி, 6 சிக்சர்: டோனியின் அதிரடி ஆட்டம்!!

ஜார்கன்ட்,

மாநிலங்களுடைக்கு இடையே நடைபெறும் 50 ஓவர் கொண்ட விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற லீக் போட்டியின்  ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள டோனி தலைமையிலான ஜார்கண்ட் அணியும், சத்தீஸ்கர் அணியும் மோதின.

முதலில் டாஸ் வென்ற சத்தீஸ்கர் அணி பீல்டிங் தேர்வு செய்தது.  அதன் காரணமாக டோனி அணி பேட்டை பிடித்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்தன. 6 விக்கெட்டுகள் முடிவில் 57 ரன்களே பெற்றிருந்த நிலையில், 7 விக்கெட்டாக களமிறங்கினார் டோனி. அவருக்கு இணையாக நதீம் களத்தில் இருந்தார்.

டோனி நெடுநாளைக்கு பிறகு தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  107 பந்தில் 129 ரன்கள் குவித்து கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார்.  இதில் 10 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் அடங்கும்.

‘டோனியின் சதத்தால் ஜார்கண்ட் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் சேர்த்தது.

244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சத்தீஸ்கர் அணி களம் இறங்கியது. ஆனால்,  38.4 ஓவரில் 165 ரன்கள் எடுப்பதற்குள் ஆல்அவுட் ஆனது.

இதனால் டோனி அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வருண் ஆரோன், நதீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

டோனியின் அதிரடி ஆட்டம் காரணமாகவே ஜார்கண்ட் அணி வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed