விஜய் ஹசாரே டிராபி: விஜய் சங்கர் சதத்தால் தமிழக அணி அசத்தல் வெற்றி

சென்னை:

விஜய் ஹசாரே டிராபிக்கான லீக் சுற்றில் விஜய் சங்கர் அதிரடி சதம்  காரணமாக தமிழக அணி 130 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னையில் நேற்று நடந்த இப்போட்டியில் முதலில் பேட் செய்த தமிழக அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன் விளாசியது. இதையடுத்து பேட் பிடித்த அசாம் அணியை 130 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து, தமிழக அணி அசத்தல் வெற்றி பெற்றது.

விஜய் ஹசாரா டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ்நாடு – அசாம் அணிகள் மோதின. தமிழ்நாடு டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.  ஆட்டத்தின்போதுஇ கேப்டன் பாபா இந்தர்ஜித் 92 ரன்னும் (72 பந்து), துவக்க ஆட்டக்காரர் முகுந்த் 71 ரன்னும் (78 பந்து) எடுத்து ஆட்டமிழந்தனர்.

3வது விக்கெட்டுக்கு களமிறங்கிய விஜய் சங்கர் அதிரடியாக ஆடி 7 சிக்சர், 7 பவுண்டரியுடன் 99 பந்தில் 129 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து  களமிறங்கிய அசாம் அணி 44.1 ஓவரில் 204 ரன்னில் சுருண்டது. இதன் கரணாக  130 ரன் வித்தியாசத்தில் தமிழக அரணி வெற்றி பெற்றது.

தமிழக பந்துவீச்சாளர்களில் மகேஷ், அபராஜித், வருண் சக்கரவர்த்தி, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டும், முகமது, ஷாருக்கான் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

சென்னையில் நேற்று நடந்த மற்ற ‘சி’ பிரிவு போட்டிகளில் அரியானா (304/10) 147 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானையும் (157/10), ஜார்க்கண்ட் (221/8) 73 ரன் வித்தியாசத்தில் ஜம்மு காஷ்மீரையும் (148/10) வென்றன.

இப்பிரிவில் ஜார்க்கண்ட் 18 புள்ளிகளுடன் (5 போட்டி, 4 வெற்றி, ஒரு போட்டியில் முடிவு இல்லை) முதலிடத்திலும், தமிழகம் 12 புள்ளியுடன் (5 போட்டி, 3 வெற்றி, 2 தோல்வி) 4வது இடத்திலும் உள்ளன.

கார்ட்டூன் கேலரி