இங்கிலாந்து தேசிய திரைப்பட விருது போட்டியில் விஜய்!

.

ங்கிலாந்து நாட்டில் நடைபெறும் தேசிய திரைப்பட விருதுகள் 2018ல் சிறந்த துணை நடிகருக்கான போட்டியாளர்கள் பட்டியலில் நடிகர் விஜய்யின் பெயர் இடம்பெற்றுள்ளது.

அட்லீ இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான  விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் ஆரம்பித்த நாள் முதலே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.  படத்தின் தலைப்பில் துவங்கி, அதில் இடம் பெற்ற வசனங்கள் வரை கடும் எதிர்ப்புகள் கிளம்பின. படத்தில் விலங்குகள் துன்புறுத்தப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

இவற்றை எல்லாம் கடந்து வெளியான மெர்சல் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. தெலுங்கில் டப் செய்யப்பட்டு அங்கும் ரசிகர்களின் ஆதரவை பெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்திற்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் நடைபெறும், தேசிய திரைப்பட விருதுகள் 2018 ல், சிறந்த துணை நடிகருக்கான போட்டியாளர்கள் பட்டியலில் நடிகர் விஜய்யின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதனுடன், சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள் போட்டி பட்டியலில்  மெர்சல்  திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.

போட்டியாளர்களில் வெற்றி பெறுபவர்களை தேர்ந்தெடுப்பதற்கு ஆன்லைன் வாக்குப் பதிவு நேற்று முதல் ஆரம்பமாகி வரும் 20 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இதையடுத்து  விஜய் ரசிகர்கள்  ஆன்லைனில் விறுவிறுப்பாக விஜய்க்கு வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள்.