‘மாஸ்டர்’ படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்க, இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் தளபதி 65 என பெயரிடப்படாத படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் .

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தொடங்கி இருந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் படத்தை இயக்கவில்லை என்ற தகவல் வெளியானது.

இந்நிலையில் நயன்தாராவின் கோலமாவு கோகிலா, படத்தை இயக்கிய கோலிவுட்டின் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் திலீப்குமார் படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி வைரலாகி வருகிறது.