விஜய் மல்லையாவுக்கு மூன்றாம் திருமணமா ? பரபரபூட்டும் புகைப்படங்கள்

--

ண்டன்

ந்தியாவில் வங்கி மோசடி செய்து லண்டனுக்கு தப்பு ஓடிய விஜய் மல்லையா 3 ஆம் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் சுமார் ரூ.9000 கோடி கடனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார்.   அவரை இந்தியாவுக்கு அழைத்து வர இங்கிலாந்து நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது.   அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

தற்போது விஜய் மல்லையா மூன்றாம் திருமணம் செய்துக் கொள்ளப்ப்போவதாக தகவல்கல் வெளியாகி உள்ளது.    தற்போது லண்டனில் விஜய் மல்லையாவுடன் வசித்து வரும் முன்னாள் விமான பணிப்பெண்ணான பிங்கி லால்வானியை அவர் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகனுடன் விஜய் மல்லையா மற்றும் பிங்கி

கடந்த மூன்று வருடங்களாக இருவரும் ஒன்றாக வசித்து வருகின்றனர்.   விஜய் மலையா கடந்த 1986 ஆம் ஆண்டு சமீரா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.   அவரை 1987அம் ஆண்டு விவாகரத்து செய்த பின்னர் 1993 ஆம் ஆண்டு ரேகா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.   பிறகு அவருடனும் விவாகரத்து ஆன பின்னர் தற்போது பிங்கி லால்வானி உடன் வசித்து வருகிறார்.

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சித்தார்த் மல்லையா என்னும் மகனும், லியன்னா, தன்யா என இரு மகள்களும் உள்ளனர்.