Random image

விஜய் மல்லையாவின் சொத்துக்கள் அவர் பெயரில் இல்லை  : அதிர்ச்சி தகவல்

ண்டன்

னது பெயரில் இங்கிலாந்தில் அதிக சொத்துக்கள் இல்லை என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

மதுபான ஆலை மற்றும் விமான நிறுவன அதிபர் விஜய் மல்லையா வங்கியில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் இருந்தார்.    தன் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்னும் அச்சத்தில் அவர் லண்டனுக்கு தப்பி சென்று விட்டார்.   அவரை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது.   சமீபத்தில் லண்டன் நீதிமன்றம் விஜய் மல்லையாவின் பெயரில் இங்கிலாந்தில் உள்ள சொத்துக்களை பரிமுதல் செய்ய இந்திய அரசுக்கு அனுமதி அளித்தது.

இந்நிலையில் நேற்று விஜய் மல்லையா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.   அப்போது அவர், “எனக்கு இங்கிலாந்தில் உள்ள சொத்து விவரங்கள் குறித்து நான் லண்டன் நீதிமன்றத்தில் அளித்துள்ளேன்.    நான் எனது பெயரில் உள்ள அனைத்து சொத்துக்களையும் வங்கிகளுக்கு அளிக்க தயாராக உள்ளேன்.    எனது பெயரில் ஒரு சில வாகனங்கள் மற்றும் சில நகைகள் உள்ளன.    பரிமுதல் செய்ய வருபவர்களிடம் இவைகளை நானே அளிக்க தயாராக உள்ளேன்.   நேரம் மற்றும் இடத்தை சொன்னால் போதுமானது.

எனது பெயரில் உள்ள அத்தனை சொத்துக்களையும் கைப்பற்ற அவர்களுக்கு உரிமை உள்ளது.   ஆனால் நானும் என் குடும்பத்தினரும் வசிக்கும் வீடு உள்ளிட்ட பல சொத்துக்கள் எனது தாயாரின் பெயரில் உள்ளது.   அவைகளை தொடக்கூட யாருக்கும் உரிமை இல்லை.    அதே நேரத்தில் நான் உபயோகித்த இந்தியன் எம்ப்ரெஸ் என்னும் உல்லாசப் படகை ஏலம் விடப்போவதாக செய்திகள் வந்தன.   அது எனது பெயரில் இல்லாததால் நான் அது குறித்து வருத்தம் அடையவில்லை. ” என தெரிவித்துள்ளார்.