மும்பை

ல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜய் மல்லையாவின் சொகுசு விமானம் பகுதி பகுதியாக உடைத்து விற்பனை செய்யாப்ட உள்ளது.

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு லண்டனுக்கு ஓடி விட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை செய்ய இந்திய அரசு தொடர்ந்த வழக்கில் லண்டன் நீதிமன்றம் அவரை நாட்டை விட்டு அனுப்ப பிரிட்டன் வெளியுறவுத் துறையிடம் அனுமதி கேட்டது.

வெளியுறவுத் துறை அளித்த அனுமதியை தொடர்ந்து விஜய் மல்லையா நாட்டை விட்டு விரைவில் வெளியேற்றப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் மல்லையாவின் கடனுக்கு ஈடாக அளித்துள்ள சொத்துக்களை வங்கிகள் விற்பனை செய்து பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

விஜய் மல்லையா பயன்படுத்திய சொகுசு விமானம் வெகுநாட்களாக மும்பை விமானநிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நீதிமன்றம் இந்த விமானத்தை விற்பனை செய்ய அனுமதிக்கும் போது இந்த விமானம் உபயோகிக்க முடியாத நிலையை  அடைந்துள்ளது.

இந்த விமானத்தை பகுதி பகுதியாக அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் வாங்கி உள்ளார்.  விஜய் மல்லையாவின் அந்த விமானம் தற்போது மும்பையில் உள்ள ஏர் இந்தியாவின் விமானப் பணிமனைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கு இந்த விமானம் உடைக்கப்பட்டு பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு அனுப்பப்பட உள்ளது.