Random image

விஜய் மல்லயாவின் இரு ஹெலிகாப்டர்கள் ரூ. 8.75 கோடிக்கு ஏலம்

பெங்களூரு

பிரபல தொழில் அதிபருக்கு சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் ரூ.8.75 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளன.

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பி தராமல் லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டார்.   அவரை மீண்டும் இந்தியாவுக்கு விசாரணைக்காக அழைத்து வர இந்திய அரசு லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.   விஜய் மல்லையா நிதி அமைச்சரிடம் தெரிவ்த்து விட்டு தாம் லண்டன் வந்ததாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் 17 வங்கிகள் இணைந்து தங்களுக்கு வர வேண்டிய கடன் பாக்கிக்காக விஜய் மல்லையாவின் சொத்துக்களை ஏலம் விடக் கோரி வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தன.   அதில் முதல் கட்டமாக விஜய் மல்லையாவுக்கு சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் பெங்களூருவில் ஏலம் விடப்பட்டன.

எலெக்ட்ரானிக் முறையில் நடந்த இந்த ஏலத்தில் குறைந்த பட்ச தொகையாக ரூ.1.75 கோடி அறிவிக்கப் பட்டிருந்தது.   அதற்கு அதிகமாக மூன்று நிறுவனங்கள் விலை கோரி இருந்தன.   அவ்வகையில் அதிகம் விலை கேட்டிருந்த டில்லியை சேர்ந்த சௌத்ரி ஏவியேஷன் நிறுவனம் இரு ஹெலிகாப்டர்களையும் ரூ.8.75 கோடிக்கு வாங்கி உள்ளது.