உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண வந்துள்ள விஜய் மல்லையா

ண்டன்

ந்தியா ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை காண விஜய் மல்லையா வந்துள்ளார்.

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா வங்கிகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு திருப்பி தரவில்லை. சிபிஐ நடவடிக்கைகளுக்கு பயந்து இந்தியாவை விட்டு ஓடிய விஜய் மல்லையா லண்டனுக்கு சென்று வசிக்க தொடங்கினார்.

லண்டன் நீதிமன்றம் அவரை நாடு கடத்தி இந்தியாவுக்கு அனுப்பி உத்தரவிட்ட தீர்ப்பில் அவர் மேல் முறையீடு செய்துள்ளார். தற்போது ஜாமினில் உள்ள விஜய் மல்லையா தீவிர கிரிக்க்கெட் ரசிகர் ஆவார். இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்த போட்டியை காண விஜய் மல்லையா வந்துள்ளார் இந்தப் போட்டியில் தற்போது இந்திய வீரர் தவான் 112 ரன்கள் எடுத்துள்ளார். அதை விஜய் மல்லையா ரசித்து பார்த்து வருகிறார்.

கார்ட்டூன் கேலரி