வங்கிக் கடனை செலுத்த தயாராக இருப்பதாக விஜய் மல்லையா மீண்டும் டுவிட்

ங்கிகளில்  தான் பெற்றுள்ள கடனை திரும்ப செலுத்த தயார் என்று பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இந்திய அரசுக்கு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

2016ம்ஆண்டு முதல் தாம் வாங்கிய வங்கிக் கடனை திரும்ப செலுத்த தாம் முயற்ச்சி மேற்கொண்டு வருகிறேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டு உள்ளார். செய்து வருவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கர்நாடகாவை சேர்ந்த  பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் 9000 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ள நிலையில் திடீரென தலைமறைவானார். தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ள விஜய் மல்லையாவை கைது செய்து இந்தியா அழைத்து வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், இந்தியாவில் உள்ள விஜய்மல்லையாவின் சொத்துக்கள் அனைத்தும் ஜப்தி செய்யப்பட்டுள்ள நிலையில்,  வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கர்நாடகாவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து,  விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், இங்கிலாந்து உயர்நீதி மன்றத்தின்  வணிக கோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்துள்ளன.

இதன் காரணமாக கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ள விஜய்மல்லையா,   வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே இதுகுறித்து பிரதமர் மோடி, மற்றும் நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், ஆனால், அவர்களிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை  என்று தெரிவித்திருந்த மல்லையா, இன்று தனது கடனை செலுத்த தயாராக இருப்பதாக டுவிட் செய்துள்ளார்.

சிபிஐ மற்றும் வருமானவரித்துறை தன்மீது குற்றச்சாட்டுகள் கூறி வருவதாகவும், 2016-முதல் தாம் வங்கிக் கடனை திரும்ப செலுத்த போராடி வருவதாகவும், கர்நாடக உயர்நீதி மன்றத்தில் அனைத்தையும் தெரிவிக்க தான் தயாராக இருப்பதாகவும், . வங்கிகளுக்கு கடனை திருப்பிச் செலுத்துவதில் ஆர்வம் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

தான் வாங்கிய கடனை அடைக்கும் வகையில் தனது சொத்துக்களை விற்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும், அனுமதி கிடைக்கும் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்து உள்ளார்.