இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய நிலையில் ஜாலியாக கிரிக்கெட் பார்த்த விஜய் மல்லையா

லண்டன்:

வங்கி மோசடி செய்துவிட்டு தப்பியோடிய விஜய் மல்லையா இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்துக் கொண்டிருந்தார்.


தொழிலதிபர் விஜய் மல்லையா மீது வங்கியில் கடன் பெற்று 9 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக வழக்கு உள்ளது.

இந்நிலையில், லண்டனுக்கு தப்பியோடிய விஜய் மல்லையாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்து நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த இங்கிலாந்து நீதிமன்றம் விஜய் மல்லையாவை  இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ஆட்டத்தை விஜய் மல்லையா ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரும் வழக்கு குறித்து விஜய் மல்லையாவிடம் கேட்டபோது, நான் விளையாட்டைப் பார்க்க வந்துள்ளேன் என்றார்.

கிங் ஃபிஷர் விமான சேவை நிறுவனத்தின் லோகாவை விளம்பரப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமல் பணம் கொடுத்ததாக விஜய் மல்லையா மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், இந்தியாவிடம் விஜய் மல்லையாவை ஒப்படைக்க இங்கிலாந்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் தான் விஜய் மல்லையா ஜாலியாக கிரிக்கெட் ஆட்டத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: extradition, விஜய் மல்லையா
-=-