ஜூலை 10ம் தேதி விஜய் மல்லையா நேரில் ஆஜராக வேண்டும் : உச்சநீதிமன்றம்

Vijay Mallya held guilty of contempt; SC asks him to appear in person

வங்கிக் கடன் மோசடி வழக்கில், விஜய் மல்லையா ஜூலை 10ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ9ஆயிரம் கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாத மோசடி வழக்கில் ஆஜராகுமாறு, விஜய் மல்லையாவுக்கு நீதிமன்றம் பலமுறை உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அவர் ஆஜராகத் தவறியதால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் தற்போது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜூலை 10ம் தேதி விஜய் மல்லையா நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் லண்டனுக்கு சென்றுள்ளனர். அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அந்நாட்டு அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.