100சதவிகித கடனையும் அடைத்து விடுகிறேன்: வங்கிகளிடம் விஜய்மல்லையா கெஞ்சல்

--

டில்லி:

ந்தியாவில் 9ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிவிட்டு, தற்போது இங்கிலாந்தில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் தொழிலதிபர் விஜய் மல்லையா மீதான வழக்கில், அவர் நாடு கடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வரும் 10ந்தேதி இங்கிலாந்து நீதி மன்றத்தில் வர உள்ள நிலையில், தொழிலதிபர் விஜய்மல்லையா தான் வாங்கி 100 சதவிகித கடன் தொகையையும் திரும்பி தந்து விடுகிறேன்… வாங்கிக்கொள்ளுங்கள் என்று வங்கிகளிடம் கெஞ்சி கேட்டுள்ளார்.

பல்வேறு வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாக கடன் பெற்று மோசடி செய்துவிட்டு இங்கிலாந்து தப்பிச்சென்று, அங்கு குடியுரிமை பெற்று வாழ்ந்து வருபவர் விஜய் மல்லையா. இவர்மீது பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு மற்றும் பிடிவாரண்டு உள்ள நிலையில், தேடப்பட்டு வரும் குற்றவாளியாக சிபிஐ வழக்கு பதிவு செய்து, அவரை இந்தியா கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக இங்கிலாந்து நீதி மன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டு விஜய் மல்லையாவை நாடு கடத்தும்படி கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ஜாமின் பெற்று இங்கிலாந்தில் வசித்து வருகிறார் விஜய் மல்லையா.

இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 10ந்தேதி அளிக்கப்படும் என இங்கிலாந்து நீதிமன்றம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக அவர் நாடு கடத்தப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்டியான சூழ்நிலையில், தனது கடன் தொகை மொத்தத்தையும் செலுத்தி விடுவதாக வங்கிகளுக்கு டிவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,  “அரசியல்வாதிகளும், ஊடகங்களும், நான்  பொதுத்துறை வங்கிகளின் பணத்தை வேண்டும் என்றே திரும்ப செலுத்தாமல் ஓடி விட்டதாக கூறுகின்றனர். இது தவறு. இது தொடர்பாக கர்நாடக நீதிமன்றத்தில் நான் பணத்தை செலுத்தி விடுவதாக கூறினேன். அதற்கு ஏன் யாரும் பதில் சொல்லவில்லை.

விமான எரிபொருள் விலை அதிகரித்ததால், விமானங்கள் நிதி நெருக்கடியில் சிக்கின. நஷ்டங் கள் அதிகரித்ததால், வங்கியில் வாங்கிய பணம் அதன் உபயோகத்துக்கு பயன்படுத்தப்பட்டது.  தற்போது  அசல் தொகை 100 சதவீதத்தையும் தந்து விடுகிறேன். தயது செய்து அவற்றை பெற்றுக் கொள்ளுங்கள். இவை மறுக்கப்படுமாயின் ஏன்?” எனவும் கேள்வி எழுப்பியும் டிவிட் செய்துள்ளார்.

அவரது மற்றொரு டிவிட்டில்,  தீர்ப்பு விரைவில் வர உள்ள நிலையில் பணத்தை செலுத்துவதாக விஜய் மல்லையா ஒப்புக்கொண்டுள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளதை சுட்டிக்காட்டி,  “இது வழக்கமான முட்டாள்தனம்,  நான் கடந்த 2016ம் ஆண்டு  முதலே பணத்தை திருப்பி செலுத்தி விடுவதாக கூறி வருகிறேன்” என பதிவிட்டு உள்ளார்.