Kumaresan Asak  அவர்களின் முகநூல் பதிவு
 
 
q
9,000 கோடி ரூபாய் ஏப்பப் புகழ் விஜய் மல்லயாவை பிரிட்டனிலிருந்து நாடு கடத்திக் கொண்டுவருவதில் இந்திய அரசு தோல்வியடைந்துவிட்டது.
-செய்தி
இந்திய அதிகாரிகள் கொண்டுசென்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை ஒப்படைக்க மறுத்துவிட்ட பிரிட்டிஷ் அரசு, வேண்டுமானால் தனது நாட்டிலிருந்து அவர் வெளியேறுவதற்கு ஆணையிடுவது பற்றி “பரிசீலிக்கிறோம்” என்று சொல்லியிருக்கிறது. இந்தியச் சட்டங்களில் குற்றம் என்று சொல்லப்படுகிற செயல்கள் பிரிட்டன் சட்டங்களிலும் குற்றமாகச் சொல்லப்பட்டிருந்தால்தான் அப்படிவெளியேற்றுவது பற்றி அந்த அரசு பரிசீலிக்கவே முடியுமாம்!
மற்றபடி, முறைப்படி விசா பெற்றிருப்பவரை இப்போது நாடுகடத்த முடியாது என்று அந்நாட்டு அரசு கூறிவிட்டது. சாராய அதிபர், பலப்பல நிறுவனங்களின் அதிபர், திப்பு சுல்தான் வாள் உள்பட பல விலையுயர்ந்த பொருள்களை ஏலம் எடுக்கும் வல்லமை பெற்றவர், ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு ஓனராக இருக்க முடிந்தவர், பிரிட்டனில் பல தொழில்களை நடத்திக்கொண்டிருப்பவர்… -இதையெல்லாம் விட முக்கியத் தகவல் – விஜய் மல்லயா பிரிட்டனில் வாக்குரிமை பெற்ற குடிமகனாகப் பதிவாகியிருப்பவர். இங்கே பல அரசியல் பெரும்புள்ளிகளை வளைத்தது போல அங்கேயும் வளைத்திருக்க மாட்டாரா என்ன?
இங்கே அவர் முதலில் அகில பாரத ஜனதா தள் கட்சியில் இருநதார். பின்னர் சுப்பிரமணிய சாமி கட்சியின் செயல் தலைவராக இருந்தார். காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) ஆதரவில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரானார். பாஜக ஆதரவில் இரண்டாவது தடவையும் மாநிலங்களவை உறுப்பினரானார்.
இப்படிப்பட்டவர்களுக்கு இப்படிப்பட்ட கட்சிகளின் ஆதரவு எப்போதும் கிடைப்பது எப்படிப்பட்ட அரசியல்?
இப்போது இந்தப் பதிவின் முதல் பத்திக்கு வருவோம். விஜய் மல்லயாவை நாடுகடத்திக்கொண்டுவருவதில் இந்திய அரசின் தோல்வி சட்டநுணுக்கங்கள் சார்ந்த இயலாமையாலா அல்லது உள்நோக்கமுள்ள திட்டமிட்ட முயலாமையாலா?