ண்டன்

டந்து முடிந்த கிரிக்கெட் போட்டி தொடரின் போது விஜய் மல்லையா கலந்துக் கொண்ட போது அவர் மைதானத்தின் உள்ளே நுழையும் போது அவரை வரவேற்பது போல் சில இந்தியர்கள் ”சோர் சோர் (திருடன், திருடன்)” என கூவிய வீடியோ பல இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சவுத் ஆஃப்ரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நேற்று கிரிக்கெட் போட்டி நடந்தது தெரிந்ததே.

அதைக காண விஜய் மல்லையா வந்திருந்தார்.

அவர் சர், ஜாக் ஹோப்ஸ் கேட் வழியாக உள்ளே நுழையும்போது சிலர் அவரைப் பார்த்து இந்தி மொழியில் சோர் சோர் என கூச்சலிட்டனர்.

சோர் என்றால் தமிழில் திருடன் எனப் பொருள்.

அந்த வீடியோவை படமாக்கியவரின் அருகில் இருந்த ஒருவர் அங்கே பாருங்கள், திருடன் ஸ்டேடியம் உள்ளே நுழைவதை எனும் பொருள் கொண்ட வார்த்தைகளை இந்தியில் சொல்லி இருக்கிறார்.

இதற்கு முன்பு கோஹ்லி ட்ரஸ்ட் அளித்த விருந்தில் கலந்துக் கொண்ட விஜய் மல்லையாவிடம் இந்திய வீரர்கள் யாருமே பேசாமல் இருந்தது தெரிந்ததே.

விஜய் மல்லையாவின் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் என்பது விராட் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது.