விஜய் மல்லையா சொகுசு பங்களாவை ரூ. 73 கோடிக்கு வாங்கிய நடிகர்

பனாஜி:

வங்கிகளில் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் நாட்டைவிட்டு வெளியேறிய விஜய் மல்லையா லண்டனில் வசித்து வருகிறார். அவரது சொத்துகள் தற்போது முடக்கப்பட்டுள்ளது.

கோவாவில் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்திற்கு சொந்தமான சொகுசு பங்களா உள்ளது. கிங்பிஷர் நிறுவனம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால் இந்த பங்களாவை விற்பனை செய்ய எஸ்பிஐ பல முறை முயற்சி செய்தது. உரிய விலை கிடைக்காததால் விற்பனையாகாமல் இருந்தது.

இந்நிலையில் இந்த சொகுசு பங்களாவை விகிங் மீடியா மற்றும் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை நடத்தி வரும் நடிகர்  சச்சின் ஜோஷி வாங்கியுள்ளார். ரூ.73 கோடிக்கு பங்களாவை வாங்க ஜோஷி ஒப்புக்கொண்டுள்ளார். இதனை எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா உறுதி செய்துள்ளார்.