தற்போது ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் காத்திருப்பது விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸுக்காகத் தான்.

ஏப்ரல் ஒன்பதாம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி அனைவரையும் வீட்டுக்குள் முடக்கிவிட்டது .

தொடர்ந்து தியேட்டர்களை திறக்க தாமதமாகும் என்பதால் ஒரு சில தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை நேரடியாக ஓடிடி இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர் , விஜய்யின் மாஸ்டர் படத்தையும் நேரடியாக ஓடிடி இணையதளத்தில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அடிக்கடி தகவல்கள் பரவிய வண்ணம் உள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.டிக்டாக்,யூடியூப் என்று பல தளங்களில் பல சாதனைகளை இந்த படத்தின் பாடல்கள் நிகழ்த்தி வருகிறது.

https://twitter.com/anirudhofficial/status/1297187886274617346

இந்த படத்தின் ரொமான்டிக் பாடலான அந்த கண்ண பாத்தாக்கா என்ற பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் யூடியூப்பில் 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை புடைத்திருந்தது.தற்போது இந்த படத்தின் பாடல்கள் ஸ்ட்ரீம்மிங் ஆப்களில் மொத்தமாக 350 மில்லியன் முறைக்கு மேல் கேட்கப்பட்டுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இதனை விஜய் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

https://twitter.com/MasterMovieoffl/status/1297431932578328578

இதனையடுத்து மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.