லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் கொரோனா பிரச்சனையால் பாதிக்கப்பட்டது.

XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது. இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.

பல மாதங்களாக மூடப்பட்ட தியேட்டர்கள் கடந்த மாதம் திறக்கப்பட்டதால் பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.