லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகியிருக்க வேண்டிய படம் கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தக் கொரோனா ஊரடங்கில் ‘மாஸ்டர்’ படம் குறித்து பல வதந்திகள் வெளியாவதும், அதற்குப் படக்குழுவினர் மறுப்பு தெரிவிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இன்று (ஏப்ரல் 29) காலை முதலே சமூக வலைதளத்தில், ‘மாஸ்டர்’ படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால் படக்குழுவினர் இதை மறுத்துள்ளனர்.