கொரோனா பாதித்த ரசிகர்களுக்கு உதவும் விஜய்

சென்னை:
டிகர் விஜய் ஏற்கனவே கொரோனா நிவாரண நிதியாக 1.3 ரூபாய் கொடுத்திருந்த நிலையில் தனது ரசிகர்களுக்கு வங்கி மூலமாக பணம் அனுப்பியுள்ளார்.

கொரோனா லாக்டவுன் காரணமாக வறுமையில் கஷ்டப்படும் ரசிகர்களை கண்டறிந்து அவர்களுக்கு தலா ஐந்தாயிரம் ருபாய் அனுப்பி வைத்துள்ளார்.

இந்த பணம் கிடைத்த பல ரசிகர்கள் அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதுவரை இரண்டரை லட்சம் ரசிகர்களுக்கு விஜய் பணம் அனுப்பியுள்ளார் என கூறப்படுகிறது.

விஜய்யின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். உதவி செய்த நடிகர் விஜய்க்கு அவரது ரசிகர்களும் ட்விட்டரில் உருக்கமாக நன்றி கூறி வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர்.வள்ளல் தளபதி விஜய் என்கிற ஹாஷ்டேக்கையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.