போஸ்டர் மூலம் திமுக – அதிமுக வை சீண்டும் விஜய் ரசிகர் மன்றம்

துரை

துரையில் விஜய் ரசிகர் மன்றத்தினர் அடித்துள்ள சுவரொட்டிகள் திமுக மற்றும் அதிமுக வை தாக்குவது போல் அமைந்துள்ளது.

நடிகர் விஜய் படங்கள் வெளியாகும் பொதெல்லாம் சர்ச்சை எழுந்த வண்ணம் உள்ளது. முதலில் திமுக ஆதரவாளர் என விஜய் தன்னை காட்டிக் கொண்டதாக புகார் எழுந்ததால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா விஜய் நடித்த காவலன் உள்ளிட்ட படங்களுக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்தார். அதை ஒட்டி விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.

அதன் பிறகு அதிமுகவுக்கு ஆதரவாக அவர் களம் இறங்கினார். ஒரு முறை பேட்டியின் போது விஜயின் ரசிகர்களல் அதிமுக ஆட்சிக்கு வந்தது என சந்திரசேகர் கூறியது ஜெயலலிதாவின் கோபத்தை கிளறியது. அதன் பிறகு வந்த படங்களுக்கு சிக்கல்கள் வரவே விஜய் அடக்கமாக இருந்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் கமல், ரஜினி, விஷால் உள்ளிட்ட பல நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். அந்த வரிசையில் விஜய் தனது சர்கார் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நான் முதல்வரானால் நடிக்க மாட்டேன் என குறிப்பாக தனது அரசியல் பிரவேசத்தை பற்றி கூறினார்.

தற்போது கட்சி தொடங்கி நடத்தி வரும் கமலஹாசன் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்று பேசினார். இந்நிலையில் வெளிவரும் சர்கார் படத்தை வரவேற்று மதுரை முழுவதும் விஜய் ரசிகர் மன்றத்தினர் சுவரொட்டியை ஒட்டி பரபரப்பை உண்டாக்கி உள்ளனர்.

அந்த சுவரோட்டியில்
தமிழக மக்களின் மீது அக்கறை இல்லாத ஆளும் கட்சி
எதற்கும் உதவாத எதிர் கட்சி
அமையட்டும் தளபதியின் சர்கார் நல்லாட்சி
என எழுதப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிமுக மற்றும் திமுக ஆகிய இருகட்சிகளையும் விமர்சித்த இந்த போஸ்டர் இரு கட்சியினருக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

You may have missed